spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்

-

- Advertisement -

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி-28ம் தேதி காலை 10:30 மணிக்கு சந்திக்கயிருப்பதாகவும், கோரிக்கையை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

we-r-hiring

தமிழ்நாடு முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சிறிது காலம் சட்டமன்ற உறுபினராக பணியாற்றினார், கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக பதவியேற்றார். அதன் பின் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இளைஞர் நல மேம்பட்டு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் பிப்ரவரி-28ம் தேதி  காலை 10:30 மணிக்கு சந்தித்து கோரிக்கையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த மேம்பாட்டு திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது:

இளைஞர்களின் திறமைகளை கண்டறிய முயற்சித்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும். மற்றும் அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும் என்று அமைச்சர்  உதயநிதி கூறினார்.

இதுவரை பிரதமர் மோடியை சந்திக்காத உதயநிதி முதல் முறையாக பிரதமர் மோடியை நாளை சந்திக்கயிருகிறார். இதனால் அரசியலில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

MUST READ