Homeசெய்திகள்க்ரைம்கத்தியால் தாக்கி வழிப்பறி - இளைஞர் கைது

கத்தியால் தாக்கி வழிப்பறி – இளைஞர் கைது

-

- Advertisement -

மதுரையில் கத்தியால் தாக்கி கல்லூரி மாணவா்களின் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

கத்தியால் தாக்கி வழிப்பறி - இளைஞர் கைது

we-r-hiring

மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா் பிருதிவியுடன் இரு சக்கர வாகனத்தில் கோரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் உள்ள சாலையில் இவா்களது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த நபா் கத்தியால் இருவரையும் தாக்கிவிட்டு, அவா்களிடம் இருந்த கைப்பேசிகள், பணத்தை பறித்துக் கொண்டு தப்பினாா்.

பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது

அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், இதையறிந்து அவரைத் தேடினா். அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை சாலையில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனா். அவா் கல்மேடு எல்கேபி நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பதும், இவா் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தொடா்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கைப்பேசிகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

 

MUST READ