spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

-

- Advertisement -

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நூற்பாலை வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

we-r-hiring

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊருணி தெருவைச் சோ்ந்த பாலையா மனைவி சரஸ்வதி (54). இவா் ராஜபாளையம் அழகை நகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி

இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது பருத்தி பேல்களை தூக்கிக்கொண்டு செல்லும் வாகனம் சரஸ்வதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

MUST READ