spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார்...

கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் – ஓபிஎஸ்

-

- Advertisement -

 

eps ops

we-r-hiring

கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “காவிரி பிரச்சினையில் 18 ஆண்டுகள் நடைபெற்ற நடுவர் மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பினை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்றுக்கொடுத்தார். பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் இறுதி தீர்ப்புக்கான மத்திய அரசின் அரசாணையையும் பெற்றுக்கொடுத்தார். அரசாணைப்படி, காவிரி நீரை விடுவிடுக்க வேண்டி இரு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முழுமையாக காவிரி நீரை பெறுவதற்கு சட்டபூர்வமாக முழு உரிமையும் நாம் பெற்றிருக்கிறோம். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கடமை.

முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணியில் இருக்கிறார். அவர் கர்நாடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை கேட்க வேண்டும். இல்லையெனில், இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறுவேன். கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என்ற நிலைப்பாட்டை முதல்வர் எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது விவகாரம் நீதிமன்ற விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். நானோ, சசிகலாவோ, டிடிவி தினகரனோ மீண்டும் கட்சிக்கு வருகிறோம் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை.

eps ops

அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்லி கொள்கிறார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. முதல்வர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் எடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என நடக்கிறது. அதை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை. எங்களின் நிலைப்பாடும், பொதுமக்களின் நிலைப்பாடும் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. அது, உள்ளாட்சித் தேர்தலிலும், 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்.” என இவ்வாறு பேசினார்.

MUST READ