spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கொடைக்கானலில் விதிகளை மீறிய 3 காட்டேஜ்களுக்கு 'சீல்'- 24 பேர் கைது

கொடைக்கானலில் விதிகளை மீறிய 3 காட்டேஜ்களுக்கு ‘சீல்’- 24 பேர் கைது

-

- Advertisement -

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அதிரடி காட்டிய அனைத்து துறை அதிகாரிகள்.. காட்டேஜ்களில் அதிரடி சோதனை 24 பேர் கைது மூன்று காட்டேஜ்களுக்கு சீல்… கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சோதனைக்கு பல தரப்பினரும் பாராட்டு…

கொடைக்கானலில் விதிகளை மீறிய 3 காட்டேஜ்களுக்கு 'சீல்'- 24 பேர் கைதுதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். பல லட்சம் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளாகவே போதை வஸ்துக்களின் பழக்கம் அதிகரித்தே இருந்தது.

we-r-hiring

கடந்த மூன்று மாதங்களில் கொடைக்கானல் மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா, போதை காளான் உள்ளிட்ட பல வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் பலரும் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலும்.

சமூக வலைதளங்களை முக்கியமாக பயன்படுத்தி போதை வஸ்துக்களின் பயன்பாடு அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்தது கொடைக்கானலில் நிலவிவரும் போதை வஸ்துக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பல தரப்பினரின் கோரிக்கையை அடுத்து இன்று கொடைக்கானலில் முக்கிய பகுதியான வட்டக்கானல் பகுதியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்யநாதன், கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சுற்றுலாத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட கொடைக்கானலில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் வட்டக்கானல் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அந்த பகுதியில் உள்ள காட்டேஜ்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட காட்டேஜ்களில் சோதனையிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்களிலிருந்து கஞ்சா, மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தமா 24 பேர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிரடியாக அனைத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தது கொடைக்கானலில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் திடீர் சோதனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

மேலும் கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ஐடி கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போதை வஸ்துகள் விற்கப்படுவது சமூக வலைதளர்கள் மூலமாகவும் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் முழுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

திடீர் சோதனை செய்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகளுக்கு பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதே போன்று பல்வேறு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் நிலவும் போதை வஸ்துகளை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ