spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

we-r-hiring

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் இவ்வழக்கில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலையை ஓட்டேரியில் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கடந்த 19-ம் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அஞ்சலை மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. அஞ்சலையை விரைவில் காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ