spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

-

- Advertisement -

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்தியே முன்னிட்டு இன்றைய தினம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

we-r-hiring

முருகப்பெருமானுக்கு நெற்றிக்கடனாக காவடி பால்குடம் புஷ்பக் காவடி நாக்கில் அழகு குத்தி பக்தர்கள் நேற்று கடனை செலுத்தி வருகிறார்கள் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றது மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நாழிக் கிணற்றில் குளித்துவிட்டு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூர் கடற்கரை, கோவில் பகுதி, முடி காணிக்கை, செலுத்துமிடம் போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிர்வாக அடிப்படை வசதிகள் கோயில் சார்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

MUST READ