Homeசெய்திகள்தமிழ்நாடுவால்பாறை அருகே மண் சரிவு - 2 பேர் பலி

வால்பாறை அருகே மண் சரிவு – 2 பேர் பலி

-

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 2 பேர் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு , தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இதனால் நீலகிரி, கோவை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணை பகுதியில் அதிகாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 2 பேர் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மண் சரிவில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்த நிலையில், வால்பாறையிலும் 2 பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ