spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுயாருடன் கூட்டணி? - அன்புமணி ராமதாஸ் பேட்டி

யாருடன் கூட்டணி? – அன்புமணி ராமதாஸ் பேட்டி

-

- Advertisement -
யாருடன் கூட்டணி? – அன்புமணி ராமதாஸ் பேட்டி

சேலம் மாநகர் மற்றும் சேலம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை புரிந்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

anbumani

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை ஐந்து மாதத்திற்கு முன்பாக எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். 2026ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் வகுப்போம். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டோம். என்எல்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் நெய்வேலி சுற்றுவட்டர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 15 பேரின் மரணத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிதான் காரணம்” எனக் கூறினார்.

MUST READ