spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவேலைவாய்ப்பின்மை விகிதம்... மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

வேலைவாய்ப்பின்மை விகிதம்… மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

-

- Advertisement -

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால்  வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிகை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 சதவிகதமாக குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

we-r-hiring

https://twitter.com/PChidambaram_IN/status/1819557616558702889

இந்நிலையில், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் ஆனால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக நிதியமைச்சர்  தெரிவித்துள்ளதாகவும், இதனை தயவு செய்து கொண்டாடலாமா? என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

MUST READ