ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் கடைசி உலகப் போர் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தை இவர் தயாரித்து இயக்கி நடித்துள்ளார். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நாசர், நட்டி நடராஜ், அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏஜே டிப்பு படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பூமபாஸ்டிக் எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஹிப்ஹாப் ஆதி, சின்னப்பொண்ணு, ராஜன் செல்லையா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஹிப் ஹாப் ஆதி எழுதியுள்ளார்.
ஏற்கனவே இவர் மீசைய முறுக்கு எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்ததாக இவர் கடைசி உலகப் போர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களை செய்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.