spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் நாகையாபாளையத்தை சேர்ந்த புள்ளக்குட்டி, வத்திராயிருப்பு குன்னூரை சேர்ந்த கார்த்திக் ஈஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக்கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

we-r-hiring

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

 

மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போஸ், மணிகண்டன் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தவிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

MUST READ