spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தங்கலான்" திரைப்படத்தை வெளியிட தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!

“தங்கலான்” திரைப்படத்தை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

“தங்கலான்” திரைப்படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அர்ஜுன்லால் என்பவரிடம் பெற்ற கடனை 10 கோடி கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படடது. இந்த வழக்கை விசாரித்த உயர்நிதிமன்றம், ஞானவேல் ராஜா தயாரித்துள்ள தங்கலான் திரைப்படத்தை வெளியிடும் முன்பாக ஒரு கோடி ரூபாய் சொத்தாட்சியர் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதால், தங்கலான் படத்தை வெளியிட அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

 

MUST READ