நடிகர் அஜித் நடிப்பில் கடந்தாண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருந்த நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மீகாமன், தடம், தடைறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த கூட்டணி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படத்தில் இணைந்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி விடாமுயற்சி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
Presenting the look of actor @actorsanjaysara & @Iam_Dasarathi09 🤩 from VIDAAMUYARCHI 🎬 Prepare for an intense showdown. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial… pic.twitter.com/79m5vkgMcW
— Lyca Productions (@LycaProductions) August 20, 2024
இருப்பினும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தின் இரண்டு புதிய போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தில் கணேஷ் சரவணன் (சஞ்சய் சரா) மற்றும் தாசரதி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


