spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜின் அடுத்த படைப்பு 'வாழை'.... திரை விமர்சனம் இதோ!

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு ‘வாழை’…. திரை விமர்சனம் இதோ!

-

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை படத்தின் திரை விமர்சனம்மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு 'வாழை'.... திரை விமர்சனம் இதோ!

மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருடைய படங்கள் காலத்தால் அழியாத படைப்பாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் இவருடைய நான்காவது படம் வாழை திரைப்படமும் இடம்பெற்றுள்ளதா?
என்பதை பார்க்கலாம்.

we-r-hiring

வாழை திரைப்படத்தில் மாரி செல்வராஜ் தனது வாழ்வில் நடந்த சில வழிகள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார். வாழை திரைப்படம் (ஆகஸ்ட் 23) இன்று வெளியாகி இருக்கிறது. அதாவது 1999இல் நடக்கும் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக வரும் சிறுவன் தனது அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் புளியங்குளத்தில் வாழ்ந்து வர படிப்பில் முதல் மதிப்பெண் எடுத்து குடும்பத்திற்கு பெருமை சேர்க்கிறான். அதே சமயம் பள்ளி விடுமுறை காலத்தில் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வாழைத்தார் சுமக்கும் தொழிலுக்கு செல்கிறான். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு 'வாழை'.... திரை விமர்சனம் இதோ!

அதாவது சிறு வயதிலிருந்து தான் அனுபவித்த கஷ்டங்களை திரைக்கதையாக எழுதி அதை சினிமாவாக மாற்றி ஒரு அழகிய படைப்பாக தந்துள்ளார் மாரி செல்வராஜ். படத்தில் ஆசிரியையாக நடித்திருக்கும் நிகிலா விமல் கதாபாத்திரம் பார்வையாளர்கள் மத்தியில் அவர்களுடைய பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறது. திரைக்கதையும் அதில் இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் உருவான விதம் அற்புதம். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு 'வாழை'.... திரை விமர்சனம் இதோ!படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே எந்த இடத்திலும் சலிப்படைய வைக்காமல் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. திரைக்கதை படத்திற்கு ஒரு ஹீரோவாக இருந்தால் சந்தோஷ் நாராயணனின் இசை மற்றொரு ஹீரோவாக படத்தை தாங்கி பிடித்துள்ளது. எனவே இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

MUST READ