கிரீஸ் ரயில் விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு
கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்தது.

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி என்ற இடத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் இரண்டு ரயில்களும் பயங்கர விபத்துக்குள்ளாகின.


தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்
ரயில்கள் மோதிய வேகத்தில், பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி, கீழே கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்தது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


