Homeசெய்திகள்சினிமாபாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்கு

பாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்கு

-

- Advertisement -

பாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்குமலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது.

மேலும், அதிகாரத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் இளம் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரில், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் விடுத்த பிரிவில் திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஸ்கட் ஹோட்டலில் 2016ல் நடந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MUST READ