spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் - ஒருவர் கைது

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் – ஒருவர் கைது

-

- Advertisement -

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் தகாத முறையில்  நடந்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கில், நீல சட்டை அணிந்திருந்த  கிஷோர் என்ற நபரை, சென்னை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் - ஒருவர் கைதுபாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஐ.டி. நிறுவனத்தில் பணி புரியும் கரூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் S 9 பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

we-r-hiring

அப்போது அந்த விரைவு ரயில் 26 ம் தேதி அதிகாலை 2 மணியளவில், காட்பாடி ரயில் நிலையம் நெருங்கிய சமயம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐ.டி. பெண் ஊழியரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

பாதிக்கபட்ட இளம் பெண்ணிடம், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பெண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதையடுத்து, அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலை அடுத்து அமைக்கப்பட்ட நான்கு தனிப்படை போலீசார், கிடைக்கப்பட்ட புகைப்படத்தை ரகசியமாக கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் - ஒருவர் கைதுஇந்நிலையில், ரயில்வே போலீசார் வெளியிட்ட புகைப்படம், தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டன ரயில்வே காவல் துறையினருக்கு பல தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து 40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது

பழைய மகாபல்லிபுரம் சாலையில் தங்கியிருந்த நபரை தனிப்படை போலீசர் பிடித்து நடத்திய விசாரணையில், ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்காக காத்திருந்த போது ரயிலை தவறவிட்டதாகவும், அடுத்து வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய போது, அப்பெண்ணால் கவரப்பட்டு, அதிகாலையில் அப்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரயில்வே காவல் நிலையம் அழைத்து வரபட்ட நபரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

MUST READ