கியூபாவில் 12 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
கியூபாவின் சாண்டியாகோ பகுதியில் கடந்த 12 நாட்களாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஹால்குவின் மாகாணத்தில் பினாரஸ் டி மயாரி என்ற மலைத்தொடர் உள்ளது. அடர்ந்து வளர்ந்த மரங்களும், தேயிலை தோட்டங்களும் இந்த மலைத் தொடரில் நிறைந்து காணப்படுகின்றன.

மலைத்தொடரில் உள்ள வனப்பகுதியில் கடந்த 18-ம் தேதி காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு விதங்களிலும் அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கியூபாவின் ஹோல்கன் மாகாணத்தில் உள்ள பினாரிஸ் மலைப்பகுதியில் உள்ள அடர் வனத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி காட்டுத்தீ பற்றியது. அதை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் அருகிலுள்ள சா ண்டியாகோ மாகாண வனப்பகுதிக்கும் தீ பரவியது. இதையடுத்து, தீயணைப்புப் பணியில் உள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை மேலிருந்து கொட்டி, தீயை அணைக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் கியூபாவில் 80 முறை காட்டுத்தீ பற்றியுள்ளது.