spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா500 கோடி வசூலை நெருங்கும் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியின் 'கோட்'!

500 கோடி வசூலை நெருங்கும் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியின் ‘கோட்’!

-

- Advertisement -

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 500 கோடி வசூலை நெருங்கும் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியின் கோட்!இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். அந்த வகையில் இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அதேசமயம் ஏஐ டெக்னாலஜி மூலம் கேப்டன் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் தந்தது. அடுத்தது அஜித், தோனி, சூர்யா ஆகியோரின் குறியீடுகளும் ரசிகர்களை கவர்ந்தது. அதன்படி இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெளியான 13 நாட்களில் இத்திரைப்படம் 413 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருப்பினும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் படத்தின் வசூல் குறைந்து வருவதால் இனிவரும் நாட்களில் இப்படம் 500 கோடியை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ