spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தனியா கூட்டம் நடத்துர; காளியம்மாள் குறித்து சீமான் பேசிய ஆடியோ வைரல்

தனியா கூட்டம் நடத்துர; காளியம்மாள் குறித்து சீமான் பேசிய ஆடியோ வைரல்

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளிகாம்பாள் விலகி புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய, புதிய ஆடியோ ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மாள் தனியாக ஆள் சேர்ப்பதாகவும், கூட்டம் நடத்துவதாகவும் சீமான் பேசிய ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த கட்சி விரைவில் உடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

we-r-hiring

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளியம்மாள் குறித்து இன்னும் ஒரு “பிசிரு” இருக்கிறது. அதை அப்படியே தட்டி விட்டுட்டாள் சரியாகிவிடும் என்று சீமான் பேசிய ஆடியோ வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதே நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர், அது எங்கள் உள்கட்சி விவகாரம், நாங்கள் பிசுரு என்போம், உசிரு என்போம் அது எங்கள் பிரச்சினை, அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சீமான் கேள்வி எழுப்பினார். அது அத்துடன் முடிந்துவிட்டது.

தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேரடியாகவே காளியம்மாளை குறித்து பேசிய ஆடியோ வெளியாகி அந்த கட்சி வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் கிராமங்களில் காளியம்மாள் தனியாக கூட்டம் நடத்துவதாகவும், அந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு செல்போன் மற்றும் பணம் கொடுத்து தனியாக காளியம்மாள் ஆள்களை சேர்த்து ஆதரவு திரட்டுவதாகவும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மீனவர்களிடம் தனியாக காளியம்மாள் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் சமுதாயத்தை ஒருங்கிணைத்து காளியம்மாள் தனியாக புதிய கட்சியை தொடங்குவதற்கு திட்டமிட்டு வருகிறாரா? அப்படி புதிய கட்சியை தொடங்கும் அளவிற்கு காளியம்மாளுக்கு வசதி வாய்ப்புகள் எங்கிருந்து கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வாரா வாரம், மாதா மாதம் ஒரு ஆடியோ வெளியாகி, அந்த கட்சி உயிரோட்டத்துடன் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வருகிறது. இதேபோன்று தொடர்ந்து ஆடியோ வந்தால் மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி நம்பகத்தன்மையை இழக்கப்போவது உறுதி.

MUST READ