spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்தேன் - அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ்

எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்தேன் – அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ்

-

- Advertisement -

எனக்கு வழங்கிய பணியை இதுவரை சிறப்பாக செய்தேன், இதற்கு மேலும் மதவாத சக்திகளுக்கு எதிராக என் பணி தொடரும் என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது- 2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.

இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.

MUST READ