வங்கதேச அணிக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இருந்து ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி
வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 2க்கு, பூஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, இந்தியா-வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான்
பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன்
சுந்தர், நிதிஷ்குமார் ரெ ட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா , ரவி பிஷ்னோய், வருண்
சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக
ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நாளை இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும், அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்க உள்ளதாக என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.


