Homeசெய்திகள்மாவட்டம்நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி

நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி

-

- Advertisement -

நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தின உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

we-r-hiring

இதில் அழிந்து வரும் பாரம்பரிய மரங்களின் விதைகள் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து 25 ஆயிரம் பாரம்பரிய மரங்களை நடவு செய்வோம் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வண்ணாங்குண்டு ஊராட்சி மகளிர் குழுவினர் அனைவரும் மரம் வடிவில் நின்று மரங்களின் முக்கியத்துவத்தை பிரதிபலித்தனர்.

MUST READ