ஜல்லிக்கட்டு வழக்கில் நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் – அனைத்து பிராணிகளுமே ஒருவிதத்தில் வலியை அனுபவிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராணிகளுக்கான உரிமை சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அந்த சட்டம் மனிதனால் உருவாக்கப்படுகிறது.

சட்டங்களை திருத்த நாடாளுமன்றத்திற்கும் , சட்டமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.
2017ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. உரிய விதிமுறைகளை உள்ளடக்கியே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
நீதிபதி அனிருத்த போஸ் ,சட்டத்தில் மட்டுமே விதிமுறைகள் உள்ளன ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது பின்பற்றப்படவில்லை என வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.
2018-ம் ஆண்டிலிருந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுதாரர்கள் 2022ம் ஆண்டு வரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை, எந்த வழக்கும் தொடரவில்லை , இப்போது திடீரென வந்து விசாரணைக்கு ஒரு நாள் முன்பு அறிக்கை தாக்கல் செய்து , ஜல்லிக்கட்டை தடை செய்ய கோருவது எந்த விதத்தில் நியாயம்? எனவே அந்த அறிக்கையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள கூடாது. மேலும் மனுதாரரின் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி,15 மீட்டர் தூரத்திற்க்குள் காளைகள் தழுவப்பட வேண்டும் என கூறுகிறீர்கள். அந்த எல்லைக்குள் எத்தனை பேர் அந்த காளையை தழுவ பாய்கிறார்கள் ?
ஒருவர் மட்டும் தான் காளையை தழுவ பாய்கிறாரா? ஒருவர் தான் பாய வேண்டும் என நீங்கள் எங்கு கூறி உள்ளீர்கள்? உங்கள் சட்ட விதிகளில் எங்குமே அது குறிப்பிடப்படவில்லையே ? சில விஷயங்களில் நாம் முந்தைய தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
1.இயல்பாகவே காளைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொருத்தமானவை இல்லை.
2. பிராணிகளுக்கும் உணர்வுகள் உள்ளன.இரண்டு நிமிடங்களாக இருந்தாலும் கூட அந்த 2 நிமிடங்களில் அந்த காளைகளை பயத்தில் வைத்திருப்பது கொடுமையானது.
3. மனிதர்களின் மகிழ்ச்சிக்காக அரசு இதனை அனுமதிக்கிறது.
வாழ்வதற்க்கான உரிமை முக்கியமானது. உரிமை என்பது சட்டங்களால் உருவாக்கப்படுகிறது. பிராணிகள் நீதிமன்றத்திற்கு வர முடியாது. எந்த உயிர்களாக இருந்தாலும் , உயிர்வாழும் வரை பயம் , கொடுமைகள் இல்லாத கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமையுள்ளது
ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த வகையில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் ? ஜல்லிக்கட்டு போட்டிகள் காளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என தமிழக அரசுக்கு யார் கூறியது ?
குறைந்தபட்சம் அந்த போட்டிகள் நடைபெறும் நேரத்தில் காளைகளுக்கு பாதுகாப்பு இல்லை.காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்படும் விதம்.
எத்தனை பேர் அதனை சூழ்ந்து நிற்பார்கள்? எத்தனை பேர் அந்த காளைகளின் மீது பாய்கிறார்கள்?
அந்த களத்தில் என்னென்ன நிகழ்வுகள் வரிசையாக நடக்கின்றன.
இந்த முழுமையான விபரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணை டிசம்பர் ஆறாம் தேதிக்கு (06/12/2022) ஒத்திவைப்பு.