கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனர் குருபிரசாத் அவரது பெங்களூரு வீட்டில் தூக்கில் தற்கொலை. பல நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உடல் அழுகிய நிலையில் இன்று கண்டுபிடிப்பு.
கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனராக திகழ்ந்து வந்த குருபிரசாத் மாதா மற்றும் யெட்டேலு மஞ்சுநாதா போன்ற சிறந்த கன்னட திரைப்படங்களை இயக்கியவர். இவர் பெங்களூரு புறநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார்.

படங்களை இயக்குவது மட்டுமின்றி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் குரு பிரசாத் நடித்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர் தயாரித்த பல திரைப்படங்கள் தோல்வியில் முடிவடைந்து பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தார். மிக சமீபத்தில் அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதேமா என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
இவர் தனக்கு இருந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றத்தின் காரணமாக அக்கம் பக்கத்தினர் காவல் தறைக்கு புகார் அளித்த நிலையில் இன்று அவரது உடலை அவரது வீட்டில் இருந்து காவல்துறை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவரது தற்கொலை குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.