Homeசெய்திகள்மாவட்டம்சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் - போராடும் மாணவர்கள்

சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்

-

- Advertisement -

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் - போராடும் மாணவர்கள்

we-r-hiring

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) மக்களுக்கு அவர்களுக்கான பிரிவில் சான்றிதழ் வழங்கி வந்தனர். தற்போது பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில்லை. இந்த நிலையில் தங்களுக்கு இந்து காட்டு நாயக்கர் என (ST) பழங்குடியினர் சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளியை புறக்கணித்து மாணவர்களை முன்னிலைப் படுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். அந்த போராட்டம் இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது நாளாக பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்

MUST READ