spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்செங்குன்றத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

செங்குன்றத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

-

- Advertisement -

சென்னை செங்குன்றத்தில் உள்ள பாஜக மாநில நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், பாஜக பிரமுகரான கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில் இன்று ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கே.ஆர்.வெங்கடேசனுக்கு எதிராக நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்குகள் தொடர்பாக அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிள்ளது. இந்த சோதனையின்போது, பல்வேறு ஆவணங்களை மத்திய குற்ற பிரிவு போலீசார் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ