Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு- ரங்கசாமி

மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு- ரங்கசாமி

-

- Advertisement -

மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு- ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

rangasamy

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,

  • 70-79 வயதுடைய மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ₨3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
  • தொகுதி வளர்ச்சி நிதியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதுச்சேரியில் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு புதிதாக அமைக்கப்படும்.
  • புதுச்சேரி துறைமுகத்தில் சிறிய கப்பல்களை பழுதுநீக்கும் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும்.
  • வணிக ரீதியில் சரக்குகளை கையாள வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • மீன்பிடி துறைமுக கடற்தளத்துக்கு அருகே மணல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். கலங்கள் எந்நேரமும் செல்ல வழிகாட்டு கருவி அமைக்கப்படும்.
  • பொது இடங்களில் துணி பை வழங்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி மறு சுழற்சிக்கு வழி செய்யும் இயந்திரங்கள் பொது இடங்களில் நிறுவப்படும்.
  • நொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகள் அமைக்கப்பயன்படுத்தப்படும்.
  • புதுச்சேரி, காரைக்காலில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தப்படும்.
  • மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் தீம் பார்க், ஓய்வுவிடுதி, சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலாத்திட்டங்கள் நிறுவப்படும்.
  • அம்பேத்கரின் பஞ்சரத்தான தலங்களில் இந்தியாவிலுள்ள நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் அட்டவணையின மக்கள் யாத்திரை செல்ல நிதியுதவி தரப்படும்.
  • உயர்கல்வி படிக்கும் பார்வைத்திறன் குறைபாடு உள்ள 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.25 லட்சத்தில் இலவச மடிகணினிகள் தரப்படும்.
  • புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடனான ரூ. 50 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 வருட காலத்துக்கு நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தப்படும்.
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ரூ. 100 கோடிக்கு மேல் முதலீட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம், கட்டடங்கள், இயந்திரங்களின் மதிப்பீட்டுக்கு தொழில் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து முதல் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 1 விழுக்காடு மானியம் வீதம் மொத்தம் 5 விழுக்காடு மானியம் தர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர்களில் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகையை அரசு செலுத்தும்.
  • புதுச்சேரியி்ல் 2023-24ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ. 11,600 கோடி என நிர்ணியக்கப்பட்டுள்ளது. சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6154 கோடியாகவும், மத்திய அரசு நிதியுதவி ரூ. 3177 கோடியும், மத்திய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி ரூ. 620 கோடியாகவும் உள்ளது.
  • நிதிபற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு அனுமதியுடன் வெளிச்சந்தை கடன் ரூ. 1707 கோடியாகும்.
  • நடப்பாண்டில் மகளிருக்கு சிறப்பு நிதியத்துக்கு ரூ. 1332 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ. 555ம், இளையோருக்கான சிறப்பு நிதியத்துக்கு ரூ 504 கோடியும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதியங்களுக்கு ரூ. 2391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பாரதியார் நினைவு அருங்காட்சியகம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், மகாகவி பாரதியார் நினைவு மண்டபம், கீழூர் நினைவுச்சின்னம், மக்கள் தலைவர் சுப்பையா நினைவகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும்.
  • பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும்.
  • தெருவிளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக ரூ. 4.5 கோடியில் மாற்றப்படும். தீயணைப்புத்துறையில் 54 மீட்டர் உயரம் செல்லும் அதிநவீன ஸ்கை லிப்ட் வாங்கப்படும்.
  • புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில் திருவுருவச்சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டலாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்படும்.
  • அசையா சொத்துகள் விவரம் சேகரிக்கப்பட்டு கோயில் நிலம், வீடு, வணிக வளாகம் ஆகியவற்றில் பெறப்படும் வாடகை உயர்த்தப்படும். நடப்பாண்டு திருக்காஞ்சியில் ரூ. 1.66 கோடியில் மகா புஷ்கரணி விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ