spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவலுக்கட்டாய கடன் வசூல் - தமிழ்நாட்டில் புதிய சட்டம்

வலுக்கட்டாய கடன் வசூல் – தமிழ்நாட்டில் புதிய சட்டம்

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று புதிய மசோதா ஒன்றினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.வலுக்கட்டாய கடன் வசூல் - தமிழ்நாட்டில் புதிய சட்டம்மேலும், இது தொடா்பாக, ”கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பிணையில் வெளிவர முடியாது.

வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

we-r-hiring

கடன் பெற்றவரையோ அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.

கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் என்று சட்டப் பேரவையில் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளாா்.

சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது விதிமீறல் வழக்கு – போக்குவரத்து காவல்துறை

MUST READ