spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு - விவசாயிகள் வேதனை!

மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!

-

- Advertisement -

ஈரோடு சந்தையில் ஓரே வாரத்தில் மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு - விவசாயிகள் வேதனை!ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு வார காலத்தில், குவிண்டாலுக்கு ஐ.1300 வரை விலை குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் நுகர்வு குறைவு மற்றும் ஏற்றுமதி சரிவால் விலை குறைந்தாக கூறப்படுகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடைபெற்று வருகிறது. வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் இந்த ஏலத்தில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று மஞ்சளை கொள்முதல் செய்கின்றனர். ஈரோடு மஞ்சள் சந்தையில், இந்த ஆண்டு தொடங்கயது முதல் புதிய மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

we-r-hiring

கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி உட்சபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.21,369-க்கு விற்பணை ஆனது. அதன்பின், மஞ்சள் விலை படிப்படியாக சரிவை கண்டது. பொதுவாக நாடு முழுவதும் மஞ்சளின் பயன்பாடு குறைய தொடங்கியுள்ளது. இதனால், தேவையான அளவு மட்டும் வியாபாரிகள் மஞ்சளை கொள்முதல் செய்கின்றனர். இதனால், ஈரோடு மஞ்சள் சந்தை உட்பட அனைத்து சந்தையிலும் வர்த்தகம் குறைந்துள்ளதால், விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

MUST READ