துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்ட தமிழக ஆளுநருக்கு அதிகாரம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, சென்னை உட்பட ஐந்து இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் சென்னை மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை.சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதால், பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான முழக்கங்களை மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர். அதேபோல் இஸ்லாமியர்களை பாதிக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வக்ஃபு சட்டதிருத்தம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்ற அவர், அச்சட்ட திருத்தம் இஸ்லாமிய மக்களுக்கு முழுவதும் எதிரானது என்றார். அதேபோல் பொதுசிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் இதுவும் அனைத்து மதத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத வகையில் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்கள் இருப்பதாக அவர் விமர்சித்தார். தமிழக சட்டமன்றத்தில் இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வஞ்சித்த ரவி, பா.ஜ.க வின் செயல்களை செய்பவராக மட்டுமே இருப்பதாக வைகோ குறை கூறினார்.
துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்ட ஆளுநருக்கு எப்படி அதிகாரம் வந்தது என்று கேள்வி எழுப்பிய வைகோ, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கக் கூடாது எனவும் கருத்துத் தெரிவித்தார். திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களை பாதுகாக்கும் இயக்கம் என்றும் பகல்ஹாம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியவர்களும் இஸ்லாமியர்கள் தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்து- இஸ்லாமியர் என்ற பகையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். நினைப்பதாக வைகோ விமர்சித்தார். வைகோ பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் இருந்து நெருப்பு புகைந்ததால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் – முதல்வர்