spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!

இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!

-

- Advertisement -

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும்  35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டில் இன்றும் 35 துணைவேந்தர்கள் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டினை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துணைவேந்தர்கள் 49 பேருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். 35 துணைவேந்தர்கள் பங்கேற்பதை திவிர்த்துள்ளனர்.

we-r-hiring

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களை சேர்ந்த எந்த துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்நிலையில் 2வது நாளாக இம்மாநாடு காலையில் தொடங்கியது. மாநாட்டில் நேற்று பங்கேற்றவர்களே இன்றும் பங்கேற்றுள்ளனர். இன்றும் 35 துணை வேந்தர்கள் தவிர்த்துள்ளனர். மாலை 5 மணிக்கு இம்மாநாடு நிறைவடையும். தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்திய வழக்கில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே உள்ளது என்று, பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டின் முதல்வரே இருப்பார் என்றும் உச்சநீமதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அறிவிக்கப்பட்டு, துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தையும் அண்மையில் நடத்தியுள்ளாா். ஆனால் இதனையும் மீறி உதகை ராஜ்பவனில் துணைவேந்தர்களுக்கான மாநாடு நடந்ததால் 35 துணை வேந்தர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

MUST READ