விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று சமூக வலைதளங்களை செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகின்ற காரணத்தால் பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் எஸ். ஜே. சூர்யா தொடர்பான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே விரைவில் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


