spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅசோக்செல்வன் நடிப்பில் உருவாகும் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அசோக்செல்வன் நடிப்பில் உருவாகும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

-

- Advertisement -

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக்செல்வன் நடிப்பில் உருவாகும் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' ..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!அடுத்தது கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார் அசோக் செல்வன். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் இவர், எமக்குத் தொழில் ரொமான்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அசோக்செல்வன் உடன் இணைந்து அவந்திகா, எம் எஸ் பாஸ்கர், ஊர்வசி, பகவதி பெருமாள், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இதனை புதுமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்க டி கிரியேஷன்ஸ் மற்றும் பக்சால் வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. பின்னர் டீசர் மற்றும் ட்ரெய்லர் போன்றவைகளும் வெளியிடப்பட்டது. அடுத்தது இந்த படம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசோக்செல்வன் நடிப்பில் உருவாகும் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' ..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!அதன்படி படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்ற பின்னர் விரைவில் இத்திரைப்படம் வெளியிடப்படும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ