ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் பட டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சொர்க்கவாசல் எனும் திரைப்படம் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கிறார். ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 23) காலை 11 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி அடுத்தது சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.