spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட - நான்கு பெண்கள் கைது

கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது

-

- Advertisement -

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..

கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட - நான்கு பெண்கள் கைது

we-r-hiring

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் என்னப்படுவது வழக்கம்.காணிக்கைகள் என்னுவதற்ககாக  பல்வேறு ஊர்களில் இருந்து பக்தி அமைப்புகளை சார்ந்தவர்கள் பங்கெடுப்பர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் என்பதற்கு வந்த பெண்களின் சிலர் பணத்தை திருடியதாக அருகில்  இருந்த பெண்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்திய  திருக்கோவில் அதிகாரிகள்.  இந்த நிலையில் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி தென்பகுதி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த   3 பெண்களும் பணத்தை தங்களது ஆடைக்குள் மறைத்து வைத்ததை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருக்கோவிலில் பணியில் இருந்த காவலர்கள் அழைக்கப்பட்டு இவர்கள் அனைவரும் திருக்கோவில் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் இவர்களில் மேல் அழித்த புகாரை  தொடர்ந்து  சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் பணத்தை  திருடிய பெண் காவலர் உள்ளிட்ட நான்கு பெண்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் தூத்துக்குடி காவல் நிலையத்தில் 3rd நிலை தலைமை காவலராக பணியாற்றி வரும் மகேஸ்வரி மற்றும் அவரை அழைத்து வந்த உறவினர்கள் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் உண்டியல் என்னும் பணிக்காக வந்துள்ளதும் அப்போது தெரியாமல் பணத்தை எடுக்கும் போது கோவில் நிர்வாகிகளிடம் சிக்கிக் கொண்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

MUST READ