spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வியாபாரியை கடத்தி நகை கொள்ளை -  போலீசார் விசாரணை

வியாபாரியை கடத்தி நகை கொள்ளை –  போலீசார் விசாரணை

-

- Advertisement -

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை. முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை.வியாபாரியை கடத்தி நகை கொள்ளை -  போலீசார் விசாரணை

ராமநாதபுரத்தை  சேர்ந்த பாலசுப்ரமணியன்(65).நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி ராமநாதபுரம் ,பரமக்குடி கடைகளுக்கு ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

we-r-hiring

கடந்த வாரம் சனிக்கிழமை(23.11.24) சென்னையில் நகைகளை வாங்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் முலம் அதிகாலை மதுரை வந்த பாலசுப்ரமணியனை ரயில் நிலையம் அருகில் வைத்து போலீஸ்  என  மிரட்டி  கும்பல் அழைத்து  சென்றனர். மதுரை அழகர்கோயில் சாலையில் கிடாரிபட்டி பகுதியில் அவரிடமிருந்த சுமார் 2 கிலோ நகைகளை (2117 கிராம்) கத்தியை காட்டி பறித்து கொண்டு பாலசுப்ரமணியத்தை இறக்கி விட்டு சென்று விட்டனர்.கொள்ளையடிக்கப்பட் நகையின் மதிப்பு சுமார் 1 கோடியே 56 லட்சம் ருபாய் ஆகும்.

இதனையடுத்து பாலசுப்பரமணியன் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.போலீசார் சிசிடிவி உள்ளிட்டவைகளை  ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்  குற்றவாளிகளை தேடி தனிப்படை போலீசார் சென்னையில் நடத்திய விசாரணையில் சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த 5 பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னை பம்மலை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் ஹோம் கார்டு படையில் (ஊர்காவல்படை) பணியாற்றி கடந்த ஆண்டு குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் சென்னை செளகார்பேட்டையில் நகை புரோக்கராக பணியாற்றி வருகிறார்.அப்போது பாலசுப்ரமணியன் சென்னையில் நகை  வாங்கி செல்வதை தெரிந்து கொண்டு அவரிடமிருந்த நகைகளை  கொள்ளையடிக்க தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கண்காணித்து உள்ளனர்.

பின்னர் சிவகங்கை மாவட்டம்  காளையார் கோயிலை சேர்ந்த செல்லபாண்டியன்,மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த பாக்கியராஜ், முத்துலிங்கம் மற்றும் நாங்குநேரியை சேர்ந்த  முத்துபாண்டி ஆகியோருடன் சேர்ந்து கடந்த 23ந் தேதி  வியாபாரியை கடத்தி நகையை கொள்ளையடித்தனர். சிசிடிவி,செல்போன் முலம் 5 குற்றவாளிகள் பிடிக்கப்ட்டுள்ளனர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இது வரை சுமார் 1.5 கிலோவிற்கு  மேலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

 

MUST READ