சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் நடிப்பில் தற்போது மிஸ் யூ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருக்கிறார். கே ஜி வெங்கடேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தினேஷ் பொன்ராஜ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்தர்க்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க பால சரவணன், கருணாகரன், மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. மேலும் இந்த படமானது கடந்த நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நடிகர் சித்தார்த், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதேபோல் ஆஷிகா ரங்கநாத், சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


