spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!

காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!

-

- Advertisement -

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை உச்சியில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

we-r-hiring

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும்
கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான காா்த்திகை தீபத் திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தாயுமானவ சுவாமி கோயிலில் மாலை 5 மணியளவில் செவ்வந்தி விநாயகா், தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை உற்சவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு உச்சிப் பிள்ளையாா் சன்னதிக்கு முன்புள்ள கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக உச்சிப் பிள்ளையாா் சன்னதிக்கு முன்பு சுமாா் 40 அடி உயரமான கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தில் 5 அடி உயர செப்புக் கொப்பரையில் 300 மீட்டா் அளவிலான பருத்தித் துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டா் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

MUST READ