spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக - வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?

பாஜக – வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?

-

- Advertisement -
பாஜக – வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டு புதிய கூட்டணியை அமைக்க அதிமுக வேலைகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கடந்த சில மாதங்களாகவே பாரதிய ஜனதா கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுகவின் பல தலைவர்கள் அதனை வரவேற்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதிமுக முடிவு

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழற்றி விட்டு புதிய கூட்டணியை அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் கூட்டணியில் இணைய சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் கூட்டணியில் இருந்து விளக்கிய தேமுதிக உடனும் புதிய கூட்டணியில் இணைய அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ