அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.அந்த மனுக்கள் மீது முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விசாரணையை தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் மனுதாரரான சூரியமூர்த்தி ஆகியோரும் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள்.
தொடர்ந்து இன்று முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி ராம்குமார் ,ஆதித்யன், சுரேன் பழனிசாமி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. பழனிச்சாமி ஜெயலலிதா உயிரிழந்த அன்றைய தினம் அதிமுகவில் யார் யாரெல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்களோ அவர்கள் மாற்றுக் கட்சியில் சேராமல் இருக்கும் பட்சத்தில் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் அதன் பிறகு மீண்டும் அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார்.

அதுவரை எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தற்போதைய சூழலில் அதிமுக விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது தவறு என்று சொன்னால் கட்சி நிறுவனர் எம் ஜி ஆரை கூட எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கி விடுவார் என்னும் கூறினார்.
துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை? – பா.ம.க., தலைவர் அன்புமணி