வே.மு.பொதியவெற்பன்

‘மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.’

‘மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு’ என்று எழுதினார் மார்க்ஸ்.
- எஸ்.என்.நாகராசன் (காலம்: 40 – ஜன. 2013)
இது, தன்னாய்வில் மனிதன் தன்னை உணர்வதையும் மீளமீளத் தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்வதையும் உணர்த்துகின்றது.
அண்ணா அவர்கள் அரசியல் இயக்கங்கள், சமய மார்க்கங்கள் வரைக்குமாகத் தூய்மைப்படுத்தும் செயல்பாடு மீளமீள மேற்கொள்ளப்பட வேண்டியதன் இன்றியமையாமை குறித்து வலியுறுத்துவது மனங்கொள்ளத் தக்கதாகும்.
மீண்டும் மீண்டும் தலைதூக்கும் கேடுகள்:
தூய்மைப்படுத்தும் இயக்கம் பெறும் வெற்றி, மீண்டும் மீண்டும் கேடுகள் தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்துவதில்லை என்பதனை இயக்கத்தைத் தூய்மைப்படுத்தும் அனுபவங்களை முன்னிறுத்தி அண்ணா சித்திரிப்பார்.
“அக்கிரமத்தை ஒழிப்பதிலே வெற்றிபெற்ற இயக்கங்கள், மீண்டும் அதுபோன்ற அக்கிரமங்கள் எழமுடியாத நிலையை நிலைத்திடச் செய்ய முடிவதில்லை. தூய்மைப்படுத்தப்பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது. அரசோச்ச முற்பட்ட வாய்மை மீண்டும் பாழ்படுகிறது. கொடுமைகள் புதிய வடிவில் கொக்கரித்துக் கிளம்புகின்றன.
இது விந்தையாக இருக்கிறது என்பது பற்றி அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெட்ட வெட்டத் துளிர்த்தெழுவது போல, மனிதகுலத்தை அலைக்கழிக்கும் கேடுகள், தூய்மையாளர்களால் அவ்வப்போது தாக்கித் தகர்க்கப்பட்டுவந்தபோதிலும், மீண்டும் மீண்டும் தலைதூக்குகின்றன; மனிதகுலத்தைப் பாழ்படுத்துகின்றன; தூய்மைப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தபடி இருக்க வேண்டும் போலும் என்று பேசிக்கொண்டோம்.” – சி.என்.அண்ணாதுரை
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ தொகுதி)
இத்தொடர்பில் அத்வைத மார்க்கம், கிறுத்துவ மார்க்கம் இரண்டையும்கூட முன்னிறுத்தித் தம் கணிப்பு வலுப்பெற்றதெனவுந் தொடர்வார்.
பொதுவாழ்க்கையில் தலைப்படுவோர் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் பல்வேறு உலகளாவிய வரலாற்று ஆவணப்பதிவுகள் அண்ணா அவர்களின் ‘தம்பிக்குக் கடிதங்கள்’ நூல் தொகுதிகள் அவருடைய தலையாய பங்களிப்புகளாகும். அண்ணாவைப் பின்பற்றி ‘முரசொலி’யில் கலைஞர் ‘உடன்பிறப்பே’ என விளித்து, அரசியல் ஆற்றுப்படையான மடல்களைத் தொடர்ந்து தீட்டியதும் கவனங்கூரத் தக்கதே.
”இன்னாச்சொல் நோற்றலும் மற்றைமை பேணலும்
மதிப்பீடுகளைக் கையாளும் அணுகுநெறியும்”
உண்ணா நோன்பைக்கூட இன்னாச்சொல் நோன்பின் பின்னதாக வகைமைப்படுத்துவார் நம் அய்யன் திருவள்ளுவர். அத்தகு பொறையுடைமையின் சிகரமாகத் திகழ்ந்தவரே பெரியார். மாற்றுக் கருத்துடையோரையும் பொறுமையாகச் செவிமடுத்தே எதிர்கொள்வார் எப்போதும். அவை வசைமொழியானாலும் அவமதிக்கும் செயலேயானாலும் அவற்றைப் பொருட்படுத்தவே மாட்டார். இத்தொடர்பிலும் அவர் வழியிலேயே அண்ணாவும் இயங்கினார். தாம் எதிரிகளாலும், ஏன் நன்றி கொன்ற நண்பர் பெயக்கண்டும் நஞ்சுண்டமைந்த சால்புக்குங் கட்டளைக்கல் அண்ணாவே.
‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டென்றே மற்றமை பேணிய பெற்றிமையாளப் பெருந்தகை. விமர்சனத்தை எவ்வாறு எந்த அளவிற் கையாள்வது நம் பக்கத்திற்குக் கொணர எத்தபைய அணுகுமுறையை மேற்கொள்வது என்பதிலும் எவற்றைத் தவிர்த்தாக வேண்டும் என்பதிலும் பெரியார் அணுகுமுறையையே அண்ணாவும் பின் தொடர்ந்தாா். தேவையானவற்றிற்குத் தேவையான அளவே விமர்சிப்பது என அவரவர் சனநாயகத் தன்மை எல்லை குறித்த புரிந்துணர்வுடன் பெரியார் இயங்கினார். இத்தொடர்பில், மேலதிகப் புரிதல்களுக்கு அ.அருள்மொழி அம்மையாரின் ‘இதழியல் முன்னோடி பெரியார்’ எனும் குறுநூலிற் காண்க.
“புலி வேட்டைக்குப் போகும்போது எலியைப் பற்றிக் கவலைப்படாதே எலியைப் பூனை பார்த்துக்கொள்ளும்’ எனவும் அதிக அளவில் சென்றடையா இதழ்களில் பிசகாகத் தூற்றி இருப்பின் அவற்றைப் பொருட்படுத்தாமல் தம் இதழ்களில் எழுதிப் பெ பெரிதுபடுத்தலாகாது எனவும் அண்ணா குறிப்பிடுவதும் பெரியார் அணுகுமுறையின் தொடர் நீட்சிதானே?
இதழாளர் கவனத்திற்கு அண்ணா வழங்கிய பாடம்
‘ஓம்லேண்ட்'(Homeland) முதல் இதழில் வெளியிடுமுகமாக நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆற்றியிருந்த உரை ஒன்றினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு அண்ணா கட்டளையிட்டார் எனவும், ஏற்கெனவே அத்துறையில் ஈடுபட்டிருந்த துணிச்சலில் தனது பணியைத் தொடங்கி, இயன்ற அளவு நன்றாகவே எழுதி முடித்துவிட்ட நிறைவில் தம் மொழிபெயர்ப்பை அண்ணாவிடம் காட்டிய ஒரு மூத்த பத்திரிகையாளரின் பட்டறிவுக் கதை இது :
‘பரவாயில்லையே நன்றாக எழுதியிருக்கிறாயே’ என்று பாராட்டுவார் என்று எதிர்பார்த்தேன். மாறாக, முகத்தைச் சுழித்தார். சிரித்துக்கொண்டே அடித்துத் திருத்தி எழுதினார்:
“While speaking in publice meeting என்று எனது மொழிபொயர்ப்பைத் தொடங்கியிருந்தேன். அண்ணா கூறினார், ‘See you Should not write like the composition of High School Stutent. In Journalism, you should use Idiomatice English. You should write either, ‘While addressing a public meeting or While the delivering his address’.
உயர்ந்த நடைதான் எழுத்துகளைப் பரிமளிக்கச்செய்யும் என்று அண்ணா கருதினார். ‘ஓம்லேண்ட்’ இதழ் நல்லமுறையில் பிழை எதுவுமின்றி வெளிவர வேண்டும் என்று அவர் மிகவும் அக்கறை காட்டினார்.
‘எழுதும்போது ஒவ்வொரு சொல்லையும் மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். பிழை திருத்தும்போது, ஒவ்வொரு எழுத்தையும் எச்சரிக்கையாகப் படிக்க வேண்டும்’ இது, அண்ணா எனக்கு சொல்லிக்கொடுத்த தாரகமந்திரம். இதழ் நடத்துவோருக்கும் இதழ்ப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கும் அவர்தம் உள்ளங்களில் ஆழப் பதிந்திட வேண்டிய தத்துவம் இது’
– எம்.எஸ்.வேங்கடாசலம். – (‘அம்ருதா’-பிப்.2009).
அண்ணா, கலைஞர் மேடைப் பேச்சில் தமிழின் உச்சாடன கதி
தமிழ் மொழியின் இயல்பு, ஒன்றுமே இல்லாத விஷயங்களிலும் பாரதூரமான விஷயம் இருப்பதாகக் காட்டக்கூடிய மேதைமையைத் தன்னகத்தே கொண்டிருப்பது என்பதை அண்ணா உணர்ந்தவர். அதை அதிக அளவில் உபயோகித்தவர், கருணாநிதி. தமிழ்மொழியை மேடைப்பேச்சின்மூலம் கௌரவத்திற்குரிய பிரதிமை ஆக்கியவர், அண்ணாதுரை. அவரது பேச்சில் விஷயாம்சமும் மொழியின் அழகியலும் இணைந்தன. இது, அவரையே ஒரு கவியாகக் காட்டிற்று. அண்ணாதுரையிடம் மேடைப்பேச்சுத் தளத்திலேயே தமிழ் ஓர் உச்சாடன கதியை அடைகிறது.
இது, மொழியின்மீது அவர் கொண்டிருந்த அசாத்தியமான ஆளுமையின் விளைவு, அண்ணாதுரை ஆரம்பித்துவைத்த இந்த உச்சாடன கதியையே கருணாநிதி தமது பேச்சிலும் சினிமா வசனங்களிலும் தீவிரப்படுத்தினார். நவீனத்தொனி, சிந்தனைச்செறிவு ஆகியவற்றைப் பின்வைத்து பாமரப் பெருவாரி மக்களிடையே ஒரு புதிய மனோதர்மத்தை வேரூன்றச் செய்ய எழுந்த ஈ.வெ.ராமசாமி இயங்கிய நேர்முகத் தன்மையை பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.
எழுத்து வடிவங்களிலிருந்து கிடைக்கும் சாட்சியங்கள் இவை. அரசியலில் இறங்காமல் நவீன வெளியீட்டு இயல்களை இவர்கள் அனுசரித்து இயங்கியிருந்தால், இன்றைய சீரிய இலக்கியக் களத்துச் சோளக்கொல்லை பொம்மைகள், இவர்கள் முன் பல்லிளித்திருக்கும். அண்ணாதுரைக்குத் தமிழ்வராது என்று சொன்னதுகளும், அவர்களுக்குப் பின்நின்று ஆடுகிறதுகளும் உட்படப் பாமரரும் புரிந்துகொள்ளத்தக்க தளத்தில்தான் தமது கருத்தை மொழியின் ஜாலவித்தைமூலம் அவர் வெளியிட்டார்’ – பிரமிள்.
இவை யாவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரமிள் குறிப்பிட்ட தரப்புகளாகும்.
குறிப்பாக பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து சாகித்திய அகாதமியின் இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல்வெளியிடுவது குறித்த சர்ச்சையில்-தமிழவன், சா.கந்தசாமி, ஜெயகாந்தன் வகையறாவினர் அதனை மறுதலித்தனர். அவர்கள் சிந்தனையாளர்களே. ஆனால், அவர்கள் எழுத்து இலக்கியமாகாதென்பதே அவர்கள் ஓட்டிவந்த குறுக்குச்சாய் ஆனால், அதை மீறி இவ்வரிசையில் பெரியார், அண்ணா, கலைஞர் குறித்த நூல்கள் வெளியாகிவிட்டன. இத்தொடர்பில்தான் பிரமில். தமிழவன் வகையறாவினரைத் தமிழறியாதவன்கள் எனக் கடுமையாகச் சாட நேர்ந்ததெல்லாம். இத்தொடர்பிலான பிரமிளின் பதிவைக குறித்த நூல்கள் காண்போமே:

மக்களின் மனோநிலத்தில் இறங்கிக் களைபிடுங்கிய பெரும்பணியில் யாருக்குச் சளைத்தோர் பெரியாரும் அண்ணாவும்?
‘நமது இலக்கிய சிறு பத்திரிகை உலகம் ஏராளமான உள் முரண்களைக் கொண்டது. இந்தப் பத்திரிகைகளை ஒரு ஏகோபித்த இயக்கம் என்று காணமுடியாது.
பார்ப்பனியத்தைக் கிசுகிசு லெவலில் பண்ணிக்கொண்டிருப்பதே ‘மாடர்ன் லிட்டரேச்சர்’ என்போரும்;
இதன் கிசுகிசுவைக் காதில் போட்டுக்கொள்ளாமல், இவர்களோடு ஒத்துழைக்கும் எக்ஸிஸ்டன்ஷலீய, அமைப்பியல் கொத்தடிமைகளும்;
‘கல்ச்சர்’ என்றால் என்ன சரக்கு என்பதையே புரிந்துகொள்ளாமல் ‘கவுன்டர் கல்ச்சர்’ பண்ணக் கிளம்புகிற உணர்வு நசிவுக் குப்பை கூளங்களும், வகுப்புவாதிகளும், கூச்சல்வாதிகளும் மலிந்த துரை தமிழின் சிறு பத்திரிகை உலகு’
இதனுள் ஜீவனைக் காப்பாற்றியபடி இயங்கும் பார்வைத் தீர்க்கம் மேலே குறிப்பிடப்பட்ட வகையறாக்களினால் பரிபூர்ணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஓர் இருட்டடிப்பு, பிரஸ்காரரான தமிழவன் தம்மைச் சிறு பத்திரிகை உலகின் பிரதிநிதியாக ஸ்டாம்பு குத்தியபடி வந்து நின்று, ஈ.வெ.ரா.வுக்கும் சி.என்.அண்ணாதுரைக்கும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
சாகித்ய அகாடமிக் கூட்டம் ஒன்றில் இவருடன் இவரது ஜாடை உள்ள வேறு இருவரும்கூட சா.கந்தசாமியும் ஜெயகாந்தனும் இந் விஷயத்தில் சேர்த்தி.
இவர்கள், சாகித்ய அகாடமியின் பிரசுரத்துக்கு ஈ.வெ.ரா.வும் சி.என்.ஏ.வும் லாயக்கில்லாதவர்கள் என்றும், தமிழே தெரியாது என்பது இதற்குக் காரணம் என்றும் கூறியது வெளிவந்திருக்கிறது.
இந்தத் துணைக் கண்டத்தின் தென்னகத்தில் இந்தியாவின் காலம் காலமான ஜாதியத்துக்கு எதிரான ஓர் இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது.
இது நேரடியாக மக்களின் மனோ நிலத்தில் இறங்கிக் களைபிடுங்கிய பெரும்பணி.
அறிவு, கலாச்சாரம், மரபு, மதங்கள், தத்துவங்கள். யாவையும் தென்னகத்தில் மனிதாய ஜீவன் பெற்றமைக்கும் இந்த மனோநிலக் களையெடுப்புப் பணிக்கும் இடையில் தொடர்பு உண்டு.
இதை மக்கள் தளத்தில் செய்தவர்கள் ஈ.வெ.ராமசாமியும், சி.என்.அண்ணாதுரையும்.
இவ்விருவருள் ஈ.வெ. ராமசாமியை நாம் பல விதங்களில் சர்ச்சிலுக்கு ஒப்பிட வேண்டும்.
முறையான படிப்பறிவுகூட அற்ற அவரது இயக்கத்தின் ஆதாரம், பார்வைத் தீர்க்கமாகும். ஜாதியம், இதன் ஆதாரமான பார்ப்பனியம், இவற்றின் விளைவான எல்லா விதமான மூட நம்பிக்கைகள், மனித விரோதங்கள் யாவற்றையும் அங்கம் அங்கமாகத் தாக்கியவர் அவர்.
ஈ.வெ.ரா.வின் பேச்சுக்களிலேயே நாம் ஓர் அதிநவீனமான பேச்சுத்தளத்து வசன கவிதை ஓட்டத்தைக் காண முடியும். அதைக் காணத்தக்க திறந்த மனம் கிடைக்கும். இது இவரை ஒரு சீரிய இயக்கத்துக்குரிய கவியாகக் காட்டாது என்றாலும்கூட, சிறு பத்திரிகை உலகின் சில கேஸ்களுக்கு இல்லாத பார்வைத் தீர்க்கம் உள்ளவராக ஈ.வெ.ரா.வைக் காட்ட முடியும்.
அண்ணாதுரையின் எழுத்துகளில் இருந்துகூட நாம் இலக்கியச் சார்பான விஷயங்களைச் சேர்க்க முடியும். இதைப் புரிந்துகொள்ள உதவியாகத்தான் இங்கே ஆரம்பத்தில் சர்ச்சிலின் யுத்தகாலச் சொற்பொழிவு உதாரணம் தந்திருக்கிறேன். அந்தச் சர்ச்சிலின் பார்வைத் தீர்க்கத்துக்கு அங்கே நோபல் பரிசு.
எங்கள் சமூகத்து ஈ.வெ.ரா.வுக்கும் அண்ணாதுரைக்கும் எழுத்தாளர்களது மதிப்பீட்டியலில்கூட இடம் இல்லை.
இதற்குத் தடையுத்தரவு போடுகிறவர்களுக்கும் எழுத்தியல் மதிப்பீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் விடம்பனம் இவர்கள் அவ்வப்போது ஏற்கெனவே என்னால் தோலுரிக்கப்பட்டவர்கள்
-பிரமிள் (‘லயம்’ இதழ் 1995 ஜனவரி
காலகதியில் தமிழவன் பெரியார் நூல்களை கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் கன்னடத்தில் பாடமாக வைக்க உறுதுணை ஆனதும் திராவிட இயக்கத்தை நோயென்றவரும் கலைஞருடன் ஒரே மேடையில் பேச நேர்ந்தபோது, ‘இங்கு நான் வணங்கத்தக்கோர் யாருமிலர்’ என்றதன் பின் கலைஞர் ஆனால், நான் ஜெயகாந்தனை வணங்குவேன், அவரிடம் ஒரு வாக்குச்சீட்டு உள்ளதால்’ எனப் பகடியாடினார். காலகதியில் கலைஞர் பிறந்தநாளையே எழுத்தாளர் தினமாகக் கொண்டாட ஜெயகாந்தனே அழைப்பு கொடுக்க நேர்ந்தது. இவையெலாம் வரலாற்றின் முரண்நகைகளே. மாறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைப்போரே ஆயினும் அத்தரப்பு எழுத்தாளர் பாலும் ஈரங்கசியும் இதயமென்மூலை கலைஞருடையதாகும்.
எழுத்தாளர்கள் பாலான கலைஞரின் தாயுமானவப் பரிவுணர்வு மாண்புமிகு தமிழ்நாட்டரசின் முதல்வர் அவர்களிடமும் தொடரோட்டமாய்க் தொடரக்கூடியதே. அகவை முதிர்ந்த தமிழறிஞர் ஓய்வூதிய இரட்டிப்பு: விண்ணப்பிக்காமலே தெரிவின் அடிப்படையிலும் விருது; வாணாட் காலத்திலேயே தகைசால் எழுத்தாளர் நூல்கள் நாட்டுடைமையாக்கல் பாடநூற் கழக நூல்வெளியீடுகள் என மற்றமை வரைக்குமாக அகலிக்கவுங் காணலாம்.
பகுத்தறிவுப் பண்பைத் தூண்டும் சக்தி
இந்தியாவில் காலம் காலமான ஜாதியத்துக்கு எதிரான ஓர் இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது. மக்கள் தளத்தில் நேரடியாக இறங்கி, மக்களின் மனோநிலத்தில் களை பிடுங்கிய பெரும்பணியை ஆற்றியோர் ஈ.வெ.ராமசாமியும் சி.என்.அண்ணாதுரையும் என்பார், பெரியார் பணியின் ஊற்றுக்கண்ணை உள்ளார உணர்ந்த கவிஞர் பிரமிள். “ஈவெராவின் இயக்கத்தைப் பற்றிப் பேசும்போது, தாழ்ந்து பேசுவதே அவரது பார்வையின் ஊற்றுக்கண்ணை உணர்வதாகும். இன்றைய வக்ரங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய நமது பிதுரார்ஜிதங்கள் (முதுசொம் – மூதாதையர் சொத்து – பொதி) முழுவதுமே விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்ற அக்னிப்புயலின் வீச்சு ஈ.வெ.ராவுடையது.
மிக எளிதாகப் பொதுமக்கள் உள்ளத்தில் பகுத்தறியும் பண்பைத் தூண்டும் சக்தி ஈ.வெ.ரா, அண்ணாதுரை எழுத்துகளில் உள்ளது. இது அகில இந்தியச் சொத்தாக மாறுவது அவசியம்.’ – பிரமிள் (‘பெரியார் பரம்பரையும் ஜெயமோகச் சுயமோகமும்)
‘மந்திரி குமாரி’யும், ‘பராசக்தி’யும் வெகுஜனத் தளத்தில் ஒரு புதிய சகாப்தம்
‘கருணாநிதியைப் படைப்புக் கோணத்திலிருந்து குறைவுபடுத்திக் காட்டுகிறவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவரது ‘மந்திரி குமாரி’யும் ‘பராசக்தி’யும் வெகுஜனத் தளத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய படைப்புகள், அவற்றுக்கு இணையாக வெகுஜனத் திரளை எட்டக்கூடிய புரட்சிகரத்தை ஜெயகாந்தன்கூட வெளியிட்டதில்லை. ஜெயகாந்தன் செய்தது மலிவுவிலைப் பிரச்சாரத்தைத்தான். கருணாநிதி இந்தத் தளத்துக்குக் கீழிறங்கி, எழுதுகருவியைத் தொட்டதில்லை. மேலும், ‘அடேய் பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கவனித்துக் ‘கொள்’ என்ற கருணாநிதியின் வசனத்துடன், ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற பாரதியின் தீர்க்கதர்சனம் அபாரமான விடம்பன(‘முரண்நகை’ – பொதி) வடிவம் பெறுகிறது. பாரதியினால் பெரியாரை உணரவும் முடியவில்லை.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகளைக் கிரகிக்கக்கூடிய விதமான மனப்பின்னணியைப் பாரதியின் எந்த எழுத்திலும் காணக்கூட காணோம். மாறாக, ‘யார்… அம்பாளா பேசறது?” என்று கேட்கும் பூசாரியிடம், அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள், அறிவு கெட்டவனே என்று கேட்கிறார் கருணாநிதி, தமது ‘பராசக்தி’யில், இந்த வெகுஜனத்து வெளியீடு. நேரடியாகப் பெரியாரின் கடவுள் இல்லை’, கிருஷ்ணமூர்த்தியின் ‘அச்சம் இல்லை எனவே கடவுளும் இல்லை’ என்ற பார்வையைப் பிரதிபலிக்கிறது!’ – பிரமிள் (‘பெரியார் பரம்பரையும் ஜெயமோகச் சுயமோகமும்)
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!


