அ.தி.மு.கவுடனான அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசியது சட்டவிரோமதானவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தவைர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கட்சி விதிகளின்படி, கூட்டணி குறித்து பெசுவதற்கான முழு உரிமை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கு மட்டுமே உண்டு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ”பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசியதாக வெளியான தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, பாமகவை நிறுவனத்தலைவராக நானே வழிநடத்தி வருகிறேன் என தெரிவித்தாா்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 9 முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்னும் அறிவித்தாா். தைலாபுரம் தோட்டத்தில் ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளாா். விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றதும் உடனே ரசீது வழங்கப்படும் எனவும் ராமதாஸ் கூறினாா்.
அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி இணைந்ததாக கூறப்படும் நிலையில் பாமக சார்பில் விருப்ப மனு பெரும் நடைமுறை தொடரும் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
மேலும், டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் ராமதாஸ் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
உண்மைக்கு புறம்பான தகவல்கள் – அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…


