தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 4000க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழக்கு நடைபேற்றுள்ளது. இதை பாஜக ஆளும் மாநிலங்களில் கூட செய்திருக்க
மாட்டார்கள் என்றாா்.

அமித் ஷாவா அல்லது அவர் அவதூறு ஷாவா என்று நினைக்கும் அளவுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகிறாா். இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி குளிர்காய நினைக்கிறது பாஜக என குற்றம் சாட்டியுள்ளாா்.
மேலும், திமுக ஆட்சி பொருப்பேற்ற பிறகு ரூ.700 கோடிக்கு மேல் கோயில்களுக்காக மட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினாா்.
தைப்பொங்கலை ஒட்டி தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.
இந்துக்கள் உரிமை பறிக்கப்படுவதாக உண்மைக்கு மாறான தகவலை அமித் ஷா கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு கண்ணியமல்ல. தமிழ்நாட்டில் இந்துக்களின் வழிப்பாட்டு உரிமைக்கு முடிவுகட்டும் வகையில் அமித் ஷா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.
மேலும், தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா, டெல்லியில் இருப்பவர்கள் ஆள வேண்டுமா என்பதே இப்போது எழும் கேள்வி, தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் என்ற சிலரின் எண்ணம் ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபொதும் நிறைவேறாது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளாா்.
வடமாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள். மக்கள் எப்போதும் அரசு பக்கம் தான் இருப்பார்கள் என்றும், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றி கொண்டு செல்வோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அறித்துள்ளாா்.
அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…


