கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற த.வெ.க தலைவர் விஐய் டெல்லியில் இருந்து சற்று நேரத்தில் புறப்படுகிறார். 
கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜயிடம் நேற்று சுமார் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக பிரச்சார வாகன ஓட்டுநரிடம் பிரச்சாரத்தின் போது விஜய் எத்தனை மணிக்கு வாகனத்தின் மேல் ஏறினார் என்று ஓட்டுநர் பரணிதரனிடம் எற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியது.
மேலும், டிசம்பர் 29,30,31ம் தேதிகளில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் தொடர்சியாக அக்கட்சித் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இந்த வழக்கு தொடர்பாக 19ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!


