அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது தந்தை பெயர், அவரது முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களுடன் எஃப் ஐ ஆர் காப்பியை வெளியிட்டதற்கு காவல்துறையும் திமுகவும் வெட்கப்பட வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவல்துறையினரின் எஃப்ஐஆர் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? என கேள்வி எழுப்பினார். மேலும் எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் செய்தது போல் எஃப்ஐஆரில் புகார் எழுதியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் புகாரை படிக்கும்போதே ரத்தம் கொதிப்பதாகவும் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பெண் குறித்து அத்தனை தகவல்களையும் வெளியிட்டு அந்த பெண்ணின் குடும்பத்தையே சிதைத்து விட்டதாகவும் ஏழு தலைமுறைக்கும் ஒரு கரும்புள்ளியை காவல்துறை ஏற்படுத்தி விட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு திமுகவினருடன் தொடர்பு உள்ளது என கூறிய அண்ணாமலை அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
ஞானசேகரன் திமுக என்ற போர்வைக்குள் இருந்ததாலேயே அவர் மீது வழக்குகள் இருந்தும் போலீசார் விசாரிக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில் “ஷேம் ஆன் யூ ஸ்டாலின்” என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடமும் பாலியல் சீண்டல்… ஞானசேகரனின் செல்போனில் 5 ஆபாச வீடியோக்கள்..!