spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி இந்தியாவிற்குள் நுழைந்த – மூன்று பேர் கைது

பலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி இந்தியாவிற்குள் நுழைந்த – மூன்று பேர் கைது

-

- Advertisement -

பலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி சட்டவிரோதமாக பங்களாதேசத்தில் இருந்து  இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய குடியுரிமை (ஆதார்) பெற்றுள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்களாதேஷ் தொழிலாளி ,அவரது இரண்டாவது மனைவி மற்றும் முதல் மனைவியின் மகன் என  மூன்று பேரும்  சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தங்கி வந்தது தெரியவந்துள்ளது. க. பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி இந்தியாவிற்குள் நுழைந்த – மூன்று பேர் கைது

கரூரில், டெக்ஸ்டைல்ஸ், பஸ்பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி என முத்தொழில் நகரத்தில் இது போல வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இன்னும் எத்தனை பேர்கள் உள்ளனர்…? கண்காணிப்பு விசாரணை வேட்டையில் களம் இறங்கியுள்ளது உளவுத்துறை.

we-r-hiring

பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெறாமல் பங்களாதேஷ் பகுதியில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று அங்கு கூலி வேலை செய்து போலியான ஆவணங்களை தயார் செய்து கொண்டு 7 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார் தற்போது பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்காக  க. பரமத்தி காவல் நிலையத்தில்  தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு நேரில் சென்றுள்ளார் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆவணங்களை பார்த்தபோது முரண்பாடாக இருந்தது தெரியவந்தது.

இதனால் குடோனில் வேலை பார்த்து தங்கி வரும் குப்பம் கிராமம் பகுதியில் உள்ள தேங்காய் நார் தயாரிக்கும் கம்பெனிக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதல் மனைவி செபாலி என்பவரை பார்க்க பாஸ்போர்ட்  விண்ணப்பித்ததாகவும் கூறினார்.

மேலும் முகம்மது அலாம் சர்தார்  இரண்டாவது மனைவி  மோல்புல்னேசன் 31 மற்றும் முதல் மனைவியின் மகன்  பலால் ஹுசைன் 25 ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதனால் மூவரின் அடையாள அட்டையை பார்த்த போலீசார் சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தங்கி வந்தது தெரியவந்தது இதனால் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்து க.பரமத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மற்றும் உளவுத்துறையை ஏமாற்றி 7 ஆண்டுகளாக கரூரில் வசித்து வந்த பங்களாதேசத்தை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா பொருளாதாரத்தை கட்டமைத்தவர் டாக்டர் மன்மோகன் சிங் – வைகோ இரங்கல்

 

MUST READ