spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்.... அல்லு அர்ஜுனின் நிரந்தர ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது?

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்…. அல்லு அர்ஜுனின் நிரந்தர ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது?

-

- Advertisement -

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் (ரேவதி- 35 வயது) உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்.... அல்லு அர்ஜுனின் நிரந்தர ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது?இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் சில மணி நேரங்களில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்தது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி காவல்துறையினரால் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில்தான் அல்லு அர்ஜுன் தரப்பில் நிரந்தர ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காவல்துறையினர் இது தொடர்பாக அவகாசம் தரும்படி கேட்டுக்கொண்ட நிலையில் இந்த வழக்கு டிசம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்.... அல்லு அர்ஜுனின் நிரந்தர ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது?அதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனுவுக்கு எதிராக போலீசார் மனு தாக்கல் செய்தனர். எனவே இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கினை அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். அத்துடன் இது தொடர்பான தீர்ப்பும் அதே நாளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ