spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்.... அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!

அவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்…. அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!

-

- Advertisement -

கல்யாண் மாஸ்டர், அஜித் குறித்து பேசி உள்ளார்.அவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்.... அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்.... அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!அடுத்தது சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சவதீகா எனும் பாடல் வெளியாகிய இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய கல்யாண் மாஸ்டர், நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் 102°F காய்ச்சலுடன் இருந்தார். சவதீகா பாடலை படமாக்கும் போது அவருக்கு இருமல் ஏற்பட்டது. நாங்கள் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். அவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்.... அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!அப்போது அவர் ‘இங்கு 40 டான்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள்’ என்று சொன்னார். பின்னர் மருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காய்ச்சலுடன் அந்த படப்பிடிப்பை முடித்து தந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ